எல்லா சுபவிஷயங்களிலும் உப்பு இடம் பெற்றிருக்கும். திருமண பந்தத்தால் மணமக்கள் மட்டுமில்லாமல் அனைத்து உறவினர்களுடனும் தலைமுறை தலைமுறையாக நல்லுறவு தொடர வேண்டும் என்பதால், உப்பும்,மஞ்சளும் பரிமாறிக் கொள்கிறார்கள்.கிரகப்பிரவேசத்திற்கு வருபவர்கள், தங்கள் உறவு என்றென்றும் தொடர வேண்டும் என்பதற்காக உப்பும், மஞ்சளும் கொடுக்கும் வழக்கம் இருக்கிறது. சுபநிகழ்ச்சிகளில் சாப்பிடும் போது இலையில் முதலில் உப்பு வைப்பதும் இதற்காகவே.