திருவாசகத்திற்கு உருகாதார் ஒரு வாசகத்திற்கும் உருகார் என்பது ஏன்?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28ஜூலை 2016 05:07
பாண்டிய அமைச்சரான திருவாதவூரார்(மாணிக்கவாசகர்) படைக்குகுதிரைகள் வாங்கச் சென்ற போது, ஆவுடையார்கோயிலில் சிவனால் ஆட்கொள்ளப்பட்டார். வழிபாட்டில் அரும்பு, மலர், காய், கனி என்னும் நான்கு வகை உண்டு. இதில் மாணிக்கவாசகரை கனிந்த நிலையில் வைத்துஅடியவர்கள் போற்றுவர். சிவன் தன் ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி உலப்பிலா ஆனந்தம் அடைவித்த நிலையை மாணிக்கவாசகரே திருவாசகப் பாடலில் குறிப்பிட்டுள்ளார். மேல்நாட்டு அறிஞர் ஜி.யு.போப் போன்றவர்கள் கூட இதில்ஈடுபட்டு ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.