மேட்டுப்பாளையம்: ஆடி அமாவாசையை முன்னிட்டு, பொது மக்கள் தங்களது முன்னோர்களின் ஆன்மா சாந்தியடைய வனபத்ரகாளியம்மன் பவானி ஆற்றின் கரையில், முன்னோர்களுக்கு படையலிட்டு வழிபட்டனர். மேட்டுப்பாளையம் பவானி ஆற்றின் கரைப்பகுதியில் அமைந்துள்ள அனைத்து இந்து சமுதாய சங்க நந்தவனத்திலும், ஆடி அமாவாசையை முன்னிட்டு, முன்னோர்களுக்கு தர்ப்பணம், திதி கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்று, அரிசி, பருப்பு, காய்கறிகளை படையலிட்டு பூஜைகள் செய்து மாவுப் பிண்டங்களை இலையில் வைத்து பவானி ஆற்றில் விட்டனர். இதில், 25 புரோகிதர்கள் பித்ரு சடங்குகள் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை நந்தவனத்தலைவர் பொன்னுசாமி மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள் ஆகியோர் செய்திருந்தனர்.