பதிவு செய்த நாள்
03
ஆக
2016
12:08
திருப்பூர்: நாட்டு பசு இனங்கள் காப்பாற்ற வேண்டி, தாராபுரம் கரையூர் காளியம்மன் கோவிலில், கன்றுகளுடன் கூடிய, 108 நாட்டு பசுமாடுகள் பங்கேற்ற, மகா கோபூஜை நடைபெற்றது. கரையூரில், ஆயிரம் ஆண்டுகள் பழமையான காளியம்மன் கோவில் உள்ளது. ஆடிப் பெருக்கு, ஆடி அமாவாசையை முன்னிட்டு, நாட்டு பசு மாட்டு இனங்கள் காக்க வேண்டியும், இயற்கை விவசாயம் செழிக்கவும், 108 கோபூஜை நேற்று நடைபெற்றது. பசுக்களுக்கு, மாலை அணிவித்து, அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. புண்ணிய நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட தீர்த்தத்தை கொண்டு, கலசங்கள் நிறுவி, 108 மூலிகைகளை கொண்டு, மகா யாக பூஜையை, சிவாச்சார்யார்கள் நடத்தினர். திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு மாவட்டங்களை சேர்ந்த, பக்தர்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர்.