பதிவு செய்த நாள்
06
ஆக
2016 
02:08
 
 துாத்துக்குடி: துாத்துக்குடி பனிமய மாதா ஆலய விழாவில், அன்னையின் திரு உருவ சப்பர பவனி நடந்தது. பனிமய மாதா ஆலய விழா ஜூலை 26ல் கொடியேற்றத்துடன் துவங்கியது.
தினமும் திருப்பலி, ஜெபமாலை, மறையுரை, நற்கருணை ஆசிர் நடந்தது. ஜூலை 31ல் புது நன்மை, கூட்டு திருப்பலி நடந்தது.  (5.8.16) வெள்ளிக்கிழமை முன் தினம் இரவு 7 மணிக்கு பெருவிழா ஆராதனை நடந்தது. தொடர்ந்து, 9 மணிக்கு அன்னையின் திரு உருவம் ஆலயத்திற்குள் பவனி வந்தது.  (5.8.16) வெள்ளிக்கிழமை காலை திருப்பலி, மதுரை முன்னாள் பிஷப் பீட்டர் பெர்னாண்டோ தலைமையில் பெருவிழா கூட்டுத் திருப்பலி, மதியம் 12 மணிக்கு திருச்சி பிஷப் அந்தோணி டிவோட்டா தலைமையில் நன்றி திருப்பலி, மாலை 5:30 மணிக்கு துாத்துக்குடி மறை மாவட்ட முதன்மை குரு கிருபாகரன் தலைமையில் ஆடம்பர திருப்பலி நடந்தது. இரவு 7:00 மணிக்கு, அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் அன்னையின் திருவுருவம் வீதிகளில் பவனி வந்தது. சப்ர பவனியை மலர் துாவி வரவேற்றனர். பாதிரியார்கள் லெரின் டிரோஸ், வினிஸ்டன், ஜெதீஷ் ஏற்பாடுகளை செய்தனர்.