சைவ சமயத்தில் கோபுர வழிபாடும் ஓர் அம்சமாகும். கோவிலின் உள்ளே இறைவனை விக்கிரகம் அல்லது லிங்க வடிவில் தரிசிக்கும்போது அந்த உருவத்தை சூட்சம லிங்கம் என்பார்கள். ஆலய கோபுரங்களை ஸ்தூப லிங்கம் என்பார்கள். ஆலயத்துக்கு வந்து வழிபாடு நடத்த வாய்ப்பு கிடைக்காதவர்கள் கூட தொலைவிலிருந்து கோபுரத்தைத் தரிசனம் செய்தாலே ஆலய வழிபாட்டின் பயன் கிடைக்கும் என்பது மரபு.