சிவாலயத்தின் உள்ளே பிரவேசித்த உடன் நமது கண்களில் முதலில் படுவது கொடிமரம் ஆகும். இந்தக் கொடி மரத்திற்கும் ஒரு தத்துவம் உண்டு. கொடிமரம் சிவனின் திருவுருவச் சின்னம். மரத்தின் கொடி ஆன்மாவின் அடையாளமாகும். கொடி மரத்தைச் சுற்றிக் கட்டியிருக்கும் தர்ப்பைக் கயிறு பாசத்தைக் குறிப்பதாகும்.