பதிவு செய்த நாள்
11
ஆக
2016
11:08
ஏத்தாப்பூர்: சு.படையாச்சியூரில், மழை வேண்டி, அம்மனுக்கு கூழ் படைத்தல், நேற்று நடந்தது. பெத்தநாயக்கன்பாளையம் தாலுகா, சு.படையாச்சியூரில், 200 ஆண்டுகள் பழமையான மாரியம்மன் கோவில் உள்ளது. அங்கு, ஊர்மக்கள் நோயின்றி வாழவும், வறட்சி அகன்று கிராமப்புற பகுதி செழிக்க மழை வரவேண்டியும், அம்மனுக்கு கூழ் படைத்தல், நேற்று நடந்தது. அதில், ஏராளமான பெண்கள், தங்கள் வீடுகளில் இருந்து எடுத்து வந்திருந்த கேழ்வரகு களி, கம்மஞ்சோறு, வெண்பொங்கல், சின்னவெங்காயம், மிளகாய், கல்உப்பு, தேங்காய், பழம், பத்தி, கற்பூரம் உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய கூடைக்கு சிறப்பு பூஜை போடப்பட்டது. பின், 150 கிலோ கூழ், அம்மன் முன் படையலிட்டு, பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.