நாகர்கோவிலில் இருந்து 10 கி.மீ., தூரத்தில் உள்ள செண்பகராமன் புதூரில் அவ்வையாருக்கு கோவில் கட்டி அம்மனாக வழிபடுகின்றனர். முதிய வடிவில் கையில் ஊன்றுகோல் பிடித்த நிலையிள்ள இவரை ஆடி செவ்வாயன்று வழிபடுவர். இக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் அரிசிமாவினால் கொழுக்கட்டையும், கூழும் படைத்து வழிபடுகின்றனர். திருமண வாழ்வைத் தவிர்த்த அவ்வையார், இளம்வயதிலேயே முதுமைக்கோலத்தை விநாயகரிடம் வேண்டிப் பெற்றவர். இதனால் அவ்வையாருக்கு படைக்கும் கொழுக்கட்டையில் உப்பு சேர்க்கும் வழக்கம் இல்லை. ஆடி கடைசி செவ்வாயன்று பெண்கள் விரதமிருந்து அவ்வையாரை வழிபடுவர். தனக்கு கிடைக்காத இல்லற வாழ்வை தன்னை வணங்கும் கன்னியருக்கு அருள்கிறார் அவ்வையார் அம்மன்.