காயத்ரி மந்திரத்தை ஜபிப்பதால், கம்பீரத் தோற்றம், தரமான பேச்சு, வறுமை, குறை நீங்குதல், பாதுகாப்பு, கண்ணில் அறிவொளி வீசுதல், அபாயம், தேவையற்ற சூழ்நிலைகள் நீங்குதல், நரம்புகளும், சுரப்பிகளும் ஊக்குவிக்கப்படுதல், எந்தச் சூழலிலும் அமைதியாக இருத்தல், நற்செயல்களில் ஈடுபடுதல் ஆகிய பலன்கள் உண்டாகும். மேலும், இது வாழ்க்கையில் குறுக்கிடும் தடைகளை நீக்கும். மூளையை பிரகாசிக்கச் செய்யும். உள்ளுணர்வினை தெளிவாக்கும். நம்மைப் பற்றிய உயர் உண்மைகள் தெரிய வரும்.