அருள் சுரக்கும் நடராஜர் உருவம் உலகத்திலே மனிதன் உருவாக்கிய சிற்ப அமைப்பில் தலைசிறந்தது என்ற கருத்து நிலவுகிறது. சைவ சித்தாந்த தத்துவக் கருத்துகளின் தொகுப்பு உருவமே நடராஜர் என்று கூறலாம். நடராஜப் பெருமானின் கையிலிருக்கும் உடுக்கை சிருஷ்டித் தொழிலின் அடையாளம். காத்தல் தொழிலைக் குறிக்கிறது அமைத்த கரம். கரத்து ஏந்தியிருக்கும் அக்கினி அழித்தல் தொழிலைக் குறிக்கும். முயலகன் மீது ஊன்றப்பட்டிருக்கும் திருப்பாதம் வினைக்கு ஈடாக ஆன்மாக்கள் அனுபவிக்கும் கர்மவினையைச் சுட்டும். சிவனின் அருள்பாலிக்கும் ஒரு நிலையைத் தூக்கிய திருவடி உணர்த்துகின்றது. இவ்வாறு ஐந்து தொழில்கள் குறிக்கும் விதத்தில் பஞ்ச கிருத்திய நடனமாடும் பரமனின் தோற்றமே நடராஜ உருவம்.