வெளியில் புறப்படும்போது எங்கே போணூர்கள் என்று கேட்கக் கூடாது என்பது ஏன்?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16ஆக 2016 02:08
சகுனம் பார்ப்பது என்பது ஒரு நம்பிக்கை அடிப்படையான விஷயம். கால் இடறுவது, பூனை குறுக்கே செல்வது போன்று எத்தனையோ விஷயங்கள் வழக்கில் உள்ளன. இது போன்று தான் கிளம்பும் போது எங்கே போறீங்க என்பதும். அதற்காக குழந்தைகள் இப்படி கேட்பதையெல்லாம் கணக்கில் கொள்ளக்கூடாது. இது ஒரு சகுனத்தடை என்பதைத் தவிர விசேஷ காரணம் ஏதுமில்லை. அப்படி யாராவது கேட்டால், சற்று அமர்ந்து தண்ணீர் பருகினால் பரிகாரம் ஆகிவிடும். பயணத்தைத் துவங்கலாம்.