கண் தெரியவில்லை, காது கேட்கவில்லை என்று வருத்தப்படுபவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் எந்தளவுக்கு கஷ்டப்படுவார்கள் என்று அவர்களைப் பார்த்து வருந்துபவர்களும் இருக்கிறார்கள். ஆனால், கிருஷ்ணர் இந்த மாற்றுத்திறனாளிகளை மகிழ்ச்சியுடன் வாழ்த்துகிறார். கவுரவர்களின் தந்தையான திருதராஷ்டிரனுக்கு கண் தெரியவில்லை. இதற்காக அவன் மிகவும் வருத்தப்பட்டான். அப்போது கிருஷ்ணர் அவனிடம், “திரவுபதியை துயில் உரிந்த போது மற்றவர்கள் அதைப் பார்த்து வேதனைப்பட்டனர். நீ கொடுத்து வைத்த ஆத்மா. அதனால் தான் அந்தக் கொடுமையை பார்க்கவில்லை, என்றான். இதிலிருந்து மாற்றுத்திறனாளிகள் தங்களுக்கு ஏற்பட்டுள்ள ஊனம் ஏதோ ஒரு காரணத்துக்காக ஆண்டவனால் தரப்பட்டுள்ளது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.