பதிவு செய்த நாள்
19
ஆக
2016
12:08
குன்னூர்: குன்னூர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் சார்பில் நடந்த கஞ்சி கலய ஊர்வலத்தில், மழை வேண்டி சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. குன்னூர் ரேலி காம்பவுண்ட் பகுதியில் உள்ள ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தின் சார்பில், முளைப்பாரி மற்றும் கஞ்சி கலய ஊர்வலம் நடந்தது. விழாவையொட்டி, குன்னூர் தந்தி மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தி ஊர்வலம் துவக்கப்பட்டது. முளைப்பாரி ஊர்வலத்தை நகராட்சி தலைவர் சரவணக்குமார், 8வது வார்டு கவுன்சிலர் சையது முபாரக் ஆகியோர் துவக்கி வைத்தனர். கஞ்சி கலய ஊர்வலத்தை பா.ஜ., மாவட்ட பொது செயலாளர் ஈஸ்வரன் துவக்கி வைத்தார்.
தந்தி மாரியம்மன் கோவிலில் துவங்கிய ஊர்வலம் விநாயகர் கோவில், பஸ் ஸ்டாண்ட், ஏர்வுட் குடியிருப்பு வழியாக ரேலி காம்பவுண்டை அடைந் தது. இதில், நீலகிரியில், தண்ணீர் பஞ்சம் தீரவும், மழை வேண்டியும், விவசாயம் செழிக்கவும் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. அன்னதானத்தை கன்டோன்மென்ட் முன்னாள் துணைத் தலைவர் வினோத்குமார் துவக்கி வைத்தார். ஊட்டியை சேர்ந்த செவ்வாடை பக்தர் குமார் வழிபாட்டில் பங்÷ கற்றவர்களுக்கு ஆடைதானம் வழங்கி னார். ஏற்பாடுகளை மன்ற தலைவி பிரபாவதி, துணைத் தலைவி இந்துமதி, செயலாளர் ஜெயலட்சுமி, இளைஞரணி தலைவர் செந்தில், முருகன் உட்பட பலர் செய்திருந்தனர். திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.