பதிவு செய்த நாள்
20
ஆக
2016
11:08
திருப்பூர் : திருப்பூர் பார்க் ரோட்டில் உள்ள, ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகோவிலில், 345வது ஆராதனை மஹோத்சவம் நேற்று துவங்கியது. பூர்வ ஆராதனை தினமான நேற்று காலை, 6:30 மணிக்கு கோ பூஜை, சுவாமிக்கு மஹாபிஷேகமும் நடைபெற்றது. ‘ராகவேந்தர சுவாமிகளின் மகிமை மற்றும் ஆராதனை’ என்ற தலைப்பில், ஆன்மிக சொற்பொழிவு நடந்தது. கனகாபிஷேகமும், பாத பூஜையும் நடந்தது. பல்லக்கு சேவையை தொடர்ந்து, மஹா தீபாராதனை, தீர்த்த பிரசாதம் வழங்கப்பட்டது. மாலையில், சங்கீத கலாபீட இசைப்பள்ளி மாணவர்களின் பக்தி இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது. ஸ்ரீ குருராகவேந்திரா சேவா சங்க தலைவர் ராமமூர்த்தி, செயலாளர் சீனிவாச ராவ், பொருளாளர் சேஷகிரி உள்ளிட்ட நிர்வாகிகள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இரண்டாம் நாளான இன்று மத்திய ஆராதனை சிறப்பு நிகழ்ச்சிகளும், நாளை உத்திர ஆராதனை சிறப்பு நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது. 22ல், சென்னை ஸ்ரீ ராகவேந்திர பக்த குடும்பம் மற்றும் திருப்பூர் பக்தர்கள் சார்பில் நடைபெற உள்ள ராகவேந்திரர் ஸ்தோத்திர பாராயண நிகழ்ச்சியுடன் விழா நிறைவடைகிறது. விழா ஏற்பாடுகளை குரு ராகவேந்திரா சேவா சங்கம் செய்துள்ளது.