கிருஷ்ண ஜெயந்தியன்று அவருக்கு படைக்க வீட்டில் என்னென்ன செய்யலாம்? இதோ சில ரெசிபிக்கள்.
ரவை சீடை தேவையான பொருட்கள்
ரவை – 1/2 கப் பொரிகடலை – 2 1/2 டேபிள் ஸ்பூன் வெண்ணெய் – 2 டீஸ்பூன் பெருங்காயத் துõள் – 1 சிட்டிகை சீரகப் பொடி – 1/2 டீஸ்பூன் மிளகுத் துõள் – 1/2 டீஸ்பூன் எள் – 1 டீஸ்பூன் துருவிய தேங்காய் – 2 டீஸ்பூன் உப்பு – தேவையான அளவு எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை: முதலில் ரவையை மிக்சியில் பொடி செய்து தனியாக வைத்துக் கொள்ளவும். பொரி கடலையை மிக்சியில் பொடி செய்து கொள்ளவும். ஒரு வாணலியில் துருவிய தேங்காயைப் போட்டு பொன்னிறமாக வதக்கி எடுத்துக் கொள்ளவும். பிறகு ஒரு பாத்திரத்தில் ரவை, பொரிகடலை மாவு, எள், சீரகப் பொடி, மிளகுத் துõள், வதக்கிய தேங்காய், உப்பு மற்றும் வெண்ணெய் சேர்க்கவும். சிறிது சிறிதாக தண்ணீர் ஊற்றி, மென்மையாக பிசைந்து 30–45 நிமிடம் ஊற வைக்கவும். அந்த மாவை சீடை அளவில் சிறு உருண்டைகளாக உருட்டி தனியாக ஒரு பேப்பரில் பத்து நிமிடம் வைக்கவும். அதே சமயம் அடுப்பில் ஒரு வாணலியை வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்றவும். எண்ணெய் சூடானதும் சீடைகளைப் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால் ரவா சீடை தயாராகி விடும்.