பதிவு செய்த நாள்
26
ஆக
2016
12:08
வேலூர்: வேலூர் அடுத்த ஸ்ரீபுரத்தில் தங்கக் கோவில் உள்ளது. கோவிலில் லட்சுமி நாராயணி அம்மன் உள்ளார். தங்கக் கோவிலின், ஒன்பதாம் ஆண்டு விழா கடந்த, 17ம் தேதி துவங்கியது. இதையடுத்து, தினமும் யாகம் நடந்து வந்தது. நேற்று முன் தினம், ஒன்பதாம் ஆண்டு விழா நடந்தது. இதையொட்டி காலை, 8 மணி முதல் கோ பூஜை, கஜ பூஜை, அஷ்வ பூஜை நடந்தது. இரவு, 7.30 மணிக்கு, நாராயணி வித்யாலயாவில் இருந்து யானை, குதிரைகளுடன் பக்தர்கள் பங்கேற்ற ஊர்வலம் நடந்தது. ஊர்வலம் கோவிலை அடைந்ததும், யாகத்தில் வைக்கப்பட்ட புனித நீரைக் கொண்டு இரவு, 8 மணிக்கு லட்சுமி நாராயணிக்கு, சக்தி அம்மா மகா அபிஷேகம், சிறப்பு பூஜைகள் செய்தார். இதில் வேலூர் எம்.எல்.ஏ., கார்த்திகேயன், தங்கக் கோவில் இயக்குனர் சுரேஷ்பாபு, நாராயணி மருத்துவமனை இயக்குனர் பாலாஜி, நாராயணி பீடம் மேலாளர் சம்பத் உட்பட பலர் பங்கேற்றனர்.