பதிவு செய்த நாள்
02
செப்
2016
11:09
சென்னை: எழுத்தாளர் கல்கியின் சரித்திர நாவல்களான, பொன்னியின் செல்வன் மற்றும் பார்த்திபன் கனவு ஆகியவற்றை, பிரமாண்ட நாடக ங்களாக மேடையில் காணும் பாக்கியம், சென்னை மக்களுக்கு வாய்த்துள்ளது. சென்னை டி.வி.கே., தி ரியல் தியேட்டர் பீப்பிள் தயாரிப்பில், மாலிக் ராஜின் இயக்கத்தில், வரும், 4ம் தேதி, மாலை 6:00 மணிக்கு, சென்னை தியாகராய நகரில் உள்ள, வாணி மஹாலில், பொன்னியின் செல்வன் நாடகமும், வரும் ௫ம் தேதி மாலை 6:00 மணிக்கு, பார்த்திபன் கனவு நாடகமும் அரங்கேறஉள்ளன. பெரிய பழுவேட்டரையர், ஆதித்தகரிகாலன், அருள்மொழி வர்மன், சுந்தர சோழர், வந்திய தேவன், மதுராந்தகன் உள்ளிட்டோர் வாழும் சோழ நாடாக, பொன்னியின் செல்வன் நாடகம் மேடை யேற உள்ளது. அதைப்போலவே, உறையூரிலிருந்து ஆட்சி புரியும் பார்த்திப சோழன், பல்லவ மன்னன் நரசிம்மனிடம் போரிட்டு, மரணிக்கும் த ருணத்தில், தன் எதிரியான நரசிம்மனிடமே, தன் மகனான விக்கிரமனை வளர்த்து வீரனாக்கும் பொறுப்பை வழங்குகிறான். இவ்வாறு, பல்லவ, ÷ சாழ சாம்ராஜ்யங்களை கண் முன் நிறுத்துகிறது, பார்த்திபன் கனவு நாடகம். நான்கு மணி நேரம் நடக்கும் இந்த பிரமாண்ட நாடகங்கள், பலமுறை ÷ மடையேறி, ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றுள்ளன. இதுவரை பார்க்காதவர்கள், இந்த முறையும் தவற விடாமல் இருப்பது நல்லது. டிக்கெட்டுக்கு: 90030 09704