பதிவு செய்த நாள்
06
செப்
2016
12:09
ஆர்.கே.பேட்டை;அம்மன் ஜாத்திரை திருவிழாவை ஒட்டி, நேற்று, ஒரு நாள் விழாவுடன், விநாயகர் அவசரமாக நீர்நிலையில் கரைக்கப்பட்டார். ஆர்.கே.பேட்டை அடுத்த, சந்திரவிலாசபுரம் கிராமத்தில், இன்று, அம்மன் ஜாத்திரை திருவிழா நடக்கிறது. இதையொட்டி, நேற்று, ஒரு நாள் பூஜையுடன், விநாயகர் சதுர்த்தி நிறைவு பெற்றது.ஜாத்திரை திருவிழாவில், அசைவ படையல், ஆடு பலியிடுதல் உள்ளிட்டவை இடம்பெற உள்ளதால், விநாயகரை, நேற்று மாலையே, பகுதிவாசிகள் நீர்நிலைகளில் கொண்டு சென்று கரைத்தனர். இன்று, செவ்வாய்க்கிழமை காலை, அம்மன் ஜாத்திரை திருவிழாவை ஒட்டி, காலை 10:00 மணிக்கு கூழ் வார்த்தல், இரவு, 8:00 மணிக்கு கும்பம் படைத்தல் உள்ளிட்டவை நடைபெற உள்ளன. இதை தொடர்ந்து, மலர் அலங்காரத்தில் அம்மன் வீதியுலா எழுந்தருள உள்ளார்.