திருப்பதி: திருமலையில், அக்., 3ம் தேதி முதல், பிரம்மோற்சவ விழா துவங்குகிறது. திருமலை ஏழுமலையானுக்கு, புரட்டாசி மாதம், நவராத்திரியின் போது, 10 நாட்கள் ஆண்டு பிரம்மோற்சவம் நடக்கும். அதன்படி, அக்., 3ம் தேதி, பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கி, 11ம் தேதி வரை நடக்க உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை, தேவஸ்தானம் செய்து வருகிறது.