கும்பகோணத்திற்கு அருகில் உள்ள தாராசுரம் ஐராவதேசுவரர் திருக்கோயிலில் உள்ள ராஜகம்பீரன் மண்டபம் அனைவரும் காண வேண்டிய கலைப்பொக்கிஷம். அம்மண்டபத்து தூண்களில் நடனமாடும் விநாயகப்பெருமானின் அழகான பல தோற்றங்கள் நம் கண்ணையும் கருத்தையும் கவரும் வகையில் அற்புதமாகச் செதுக்கப்பட்டுள்ளன.