வேலூரில் இருந்து 22 கி.மீ. தொலைவில் உள்ளது வில்வநாதீஸ்வரர் கோயில். இங்குள்ள விநாயகர் கனிவாங்கிய பிள்ளையார் என்று அழைக்கப்படுகிறார். முருகனுக்கும் விநாயகருக்கும் சிவன் வைத்த போட்டியில் வென்ற விநாயகர், ஞானப்பழத்துடன் இத்தலத்தில் வந்து அமர்ந்ததாக வரலாறு. பெயருக்கேற்ப துதிக்கையில் மாங்கனியை வைத்து வடக்கு நோக்கி அருள்பாலிக்கிறார் இந்த விநாயகர்.