திருச்சி மத்தியப் பேருந்து நிலையத்திலிருந்து கே.கே. நகர் செல்லும் பேருந்துபாதையில் சுமார் 5 கி.மீ. தொலைவில், முருகவேல், நகரில் உள்ளது ராஜ விநாயகர் கோயில். கன்னியர் தங்களுக்கு விரைந்து திருமணமாக ராஜ விநாயகரை வேண்டி, உரித்த முழுத்தேங்காய்களை மாலையாகக் கட்டி, விநாயகருக்கு அணிவிக்கின்றனர். அவர்கள் பிரார்த்தனை விரைவில் பலிக்கின்றன.