திருச்சி பாலக்கரையில் உள்ளது, கருவறையில் இரண்டு பிள்ளையார்கள் அருள்பாலிக்கும் கோயில். ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் உள்ளவர்கள், அங்காரக சதுர்த்தி அன்று இரட்டைப் பிள்ளையாருக்கு தீபமேற்றி வழிபட தோஷம் விலகும். கேது தோஷம் உள்ளவர்கள் அறுகம்புல் மாலை கட்டி வழிபட, கேது தோஷம் விலகும். குழந்தைகள் நன்றாகப் படிக்க இரட்டையருக்கு பஞ்சமி திதியில் பஞ்சாமிர்த அபிஷேகம் செய்தால் கைமேல் பலன் கிடைக்கும் என்கின்றனர்.