Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

குபேர கணபதி பெரியவர் விரும்பிய திருப்பணி!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
தெரிஞ்சும் தெரியாம நடந்திருந்தா..
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 செப்
2016
05:09

*நடந்தது நடந்தது தான். தெரிந்தோ தெரியாமலோ நடந்த தவறுகளை நினைத்துக் கொண்டிருப்பதால் பயன் இல்லை. இனி மேல் அது நடக்காமல் பார்த்துக் கொண்டால்  முன்னேற்றத்திற்கு வழி பிறந்து விடும்.
*கோவில் திருவிழாக்களால் ஊருக்குள் ஒற்றுமை ஏற்படும். வீட்டுக்குள் சுவாமியை வணங்குவதால் குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும்.
*கல்லில் மட்டும் கடவுள் இருக்கிறார் என்று நினைக்கக் கூடாது. நம்மைச் சூழ்ந்திருக்கும் உயிர்களிடத்தில் கடவுள் இருக்கிறார் என்பதை உணர வேண்டும்.
*கோவிலுக்குப் போனாலும் சரி, போகா விட்டாலும் சரி, கடவுளை நம்பினாலும் சரி, நம்பாவிட்டாலும் சரி யார் ஒருவன் பிறரை ஏமாற்றாமல் வாழ்கிறானோ அவன் கடவுளின் அருளைப் பெறுவது உறுதி.
*‘உலகில் பிறந்து விட்டோம். கடவுள் விட்டதே வழி’ என்று வாழுங்கள். ஆற்றில் மிதக்கும் கட்டை போல உலக வெள்ளத்தில் நீந்திச் செல்லுங்கள்.
*மனிதன் தான் விரும்புவதை அடையும் சக்தியை தியானத்தின் மூலம் பெற முடியும்.
*அமைதி, சாந்தம், பக்தி, உறுதி, அருள் போன்ற உயர்ந்த எண்ணங்களை மனதில் நிரப்புங்கள். எதிர்மறை சிந்தனைகளுக்கு இடம் கொடுக்காதீர்கள்.
*பொய்யை குறிப்பிட்ட காலம் வேண்டுமானால் மறைக்க முடியும். ஆனால், உண்மை ஒருநாள் வெளிப்பட்டே தீரும்.
*காலம் பணவிலை உடையது என்னும் ஆங்கிலப் பழமொழி ஒன்று உண்டு. பொழுதை வீணாக கழித்தால் அதற்குரிய லாபம் கிடைக்காமல் போய்விடும்.
*பேச்சும், செயலும் ஒரே விதமாக இருக்கும் நல்லவர்களிடம் நட்பு கொள்ளுங்கள்.அப்படி இல்லாதவர்களின் நட்பை கனவிலும் நினைக்கக் கூடாது.
*முயற்சியில் ஈடுபடும் போது தொடக்கத்தில் நமக்கு நாமே துணையாக இருக்க வேண்டும். காலப்போக்கில் தான் மற்றவர்களின் உதவி கிடைக்கும்.
*பயம், சந்தேகம்,கோபம், சோம்பல் போன்ற குணங்கள் நமது வெற்றியைத் தடுத்து நிறுத்துகின்றன. இவையே மனிதர்களின் பகைவர்கள்.
*நம்பிக்கையும், விடாமுயற்சியும் இருக்கும் இடத்தில் தான் வெற்றி இருக்கும். இவை கேட்டதை தரும் காமதேனு போன்றவை.
*பேச்சால் ஒருவரை திருப்திபடுத்தி பயனில்லை. வாக்களித்தபடி செயலிலும் அதை நிறைவேற்றிக் காட்டுவதில் தான் பெருமை இருக்கிறது.
*குழந்தைகள் மற்ற குழந்தைகளுடன் சேர்ந்து ஓடி விளையாட வேண்டும். அவர்கள் ஓய்ந்திருக்கக் கூடாது.
*காலையில் படிப்பு, பிறகு நல்ல பாட்டு, மாலையில் விளையாட்டு என்று வழக்கப்படுத்திக் கொள்ளும் குழந்தைகள் சிறப்பாகத் திகழ்வார்கள்.
*தலை மீது வானமே இடிந்து விழுந்தாலும் கூட மனிதன் அச்சப்படுவது கூடாது.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
நீராடியதும் திருநீறு பூசி வழிபாடு செய்யுங்கள். செய்ய வேண்டிய பணிகளை மனதிற்குள் திட்டமிடுங்கள். கடவுள் ... மேலும்
 
ஏழு வெள்ளிக்கிழமைகளில் நவக்கிரக சுக்கிரனுக்கு மொச்சை நைவேத்யம் செய்து ... மேலும்
 
ஊர் ஒற்றுமையும், மகிழ்ச்சியான வாழ்வும் ... மேலும்
 
பார்வதி வழிபட்ட சிவத்தலமான மயிலாடுதுறை மாயூரநாதரை ... மேலும்
 
திரையை எடுக்கும் வரை வழிபடவோ, சன்னதியை சுற்றவோ கூடாது.  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar