ஒருமுறை வில்லிபுத்தூராருக்கும் அவரது தம்பிக்கும் பாகப்பிரிவினை தொடர்பாக சர்ச்சை எழுந்தது. இதனை அந்நாட்டு அரசனின் கவனத்துக்கு எடுத்துச் சென்றார் வில்லிபுத்தூரார். நீங்கள் மகாபாரதத்தை தமிழில் பாடி எடுத்து வாருங்கள் வில்லிபுத்தூராரே என்றான் மன்னன். வீடு திரும்பிய வில்லிபுத்தூரார், உலகில் எத்தனையோ நூல்கள் இருக்க, மகாபாரதத்தை ஏன் மன்னர் மொழிபெயர்த்து எடுத்து வரக் கூறினார் என்று யோசித்தார். தம்பியுடன் தமக்கு ஏற்பட்ட சர்ச்சையை தீர்த்திட மகாபாரதத்தின் மூலம் தாம் அறிவுரை பெற்றிட வேண்டும் என எண்ணியே, மன்னன் இவ்வாறு கூறியுள்ளார் என்பதை உணர்ந்தார் வில்லிபுத்தூரார். அவர் உடனே தமது தம்பியிடம் சென்று, உனக்கு வேண்டிய அளவு சொத்தை எடுத்துக்கொண்டு மீதியை எனக்குக் கொடு என்றார். தம்பியும் மகிழ்ந்து, அண்ணா, உங்களுக்கு வேண்டியதை எடுத்துக் கொண்டு மீதியை எனக்குக் கொடுங்கள், போதும் என்றார். சகோதர பாசத்துக்கு மகாபாரதமே உதாரணம் என்பதை இதன் மூலம் உணரலாம்.