பதிவு செய்த நாள்
10
செப்
2016
11:09
ராஜமுந்திரி: ஆந்திராவில், விநாயகர் சதுர்த்தி விழாவின் ஒரு பகுதியாக, கின்னஸ் சாதனையை தக்க வைக்கும் வகையில், 31 ஆயிரம் கிலோ எடையிலான லட்டுகள் தயாரிக்கப்பட்டு, விநாயகருக்கு படைக்கப் பட்டன.
ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியில் உள்ள, இனிப்பு தயாரிப்பு நிறுவனங்கள், விஜயவாடா மற்றும் விசாகப்பட்டினத்தில் வைக்கப்பட்டுள்ள, 76 மற்றும் 78 அடி உயர விநாயகருக்கு படைப்பதற்காக, பிரம்மாண்ட லட்டுகளை தயாரித்து அனுப்பி உள்ளன. கடந்த ஐந்து ஆண்டுகளாக, பெரிய லட்டு தயாரிப்பதில், கின்னஸ் சாதனை படைத்து வரும், ஸ்ரீ பக்த ஆஞ்சநேயா ஸ்வீட்ஸ் நிறுவனம், இந்தாண்டு, 31 ஆயிரம் கிலோ எடையுள்ள பிரம்மாண்ட லட்டு தயாரித்துள்ளது. இந்த லட்டு, விஜயவாடாவிலுள்ள விநாயகர் சிலைக்கு படைப்பதற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ராஜமுந்திரியில், இனிப்பு தயாரிப்பில் பிரபலமாகத் திகழும், ஸ்ருசி புட்ஸ் நிறுவனம், 29 ஆயிரம் கிலோ எடையுள்ள, பிரம்மாண்ட லட்டு தயாரித்துள்ளது. இந்த லட்டு, விசாகப்பட்டினத்திலுள்ள விநாயகர் சிலைக்கு படைக்க, அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.