நாமக்கல்லில் இருந்து 30 கி.மீ., துõரத்தில் உள்ளது மகேந்திரமங்கலம். இந்த கிராமத்தில் காஞ்சிப்பெரியவர் வேதம் கற்றார். பெரியவர் தங்கியிருந்த இல்லத்தின் உரிமையாளர் குவளக்குடி சிங்கம் அய்யங்கார், ‘மகா பெரியவர் வேதம் கற்ற இந்த இல்லத்தை வேறு எந்த காரியத்திற்கும் பயன்படுத்தக்கூடாது’ என சாசனம் செய்துள்ளார். மகேந்திர மங்கலத்தில் 1500 ஆண்டு பழமையான சந்திரமவுலீஸ்வரர் கோவில் உள்ளது. 1960ல் இங்கு வந்த பெரியவர், கோவில் சிதிலமடைந்து கிடந்ததைக் கண்டு திருப்பணி செய்ய ஆசைப்பட்டார். ஆனால் பல காரணங்களால் தடைபட்டது. தற்போது கோவில் திருப்பணி செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதில் பக்தர்கள் பங்கேற்கலாம். அலைபேசி: 99403 67222– சப்தகிரி