விழுப்புரம்: விழுப்புரம் அடுத்த ப.வில்லியனுார் லஷ்மி நாராயண பெருமாள் கோவிலில், இன்று மகா சிரவண தீபம் ஏற்றப்படுகிறது. திருவோண நட்சத்திரத்தை முன்னிட்டு இன்று பிற்பகல் ௨:௦௦ மணிக்கு மூலவர் பெருமாளுக்கும், உற்சவர் பெருமாளுக்கும் அலங்காரம், சிறப்பு திருமஞ்சனம் நடக்கிறது. பின்னர், மூலவர் பெருமாள் புஷ்பம், துளசியால் அலங்கரித்து, தாயாருடன் அருள்பாலிக்கிறார். மாலை ௫:௩௦ மணிக்கு மூலவர் பெருமாளுக்கு சாற்று முறை, சிறப்பு அலங்காரம் செய்து, கருட கம்பத்தில் எழுந்தருளுகிறார். தொடர்ந்து, மகா சிரவண தீபம் ஏற்றப்பட்டு, அர்த்த மண்டபத்தில் பெருமாள் அருள்பாலிக்கிறார்.