உலகளந்த பெருமாள் கோவிலில் வாமன ஜெயந்தி விழா கோலாகலம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14செப் 2016 11:09
திருக்கோவிலுார்: உலகளந்த பெருமாள் கோவிலில், திருவோணத்தை முன்னிட்டு, வெண்ணைக்காப்பு அலங்காரத்தில் வாமனர் அருள்பாலித்தார். திருக்கோவிலுார் பெருமாள் கோவிலில் மூலவரான உலகளந்த பெருமாள் சன்னதிக்கு பின்புறத்தில் வாமனர் சன்னதி அமைந்துள்ளது. ஆவணி திருவோணத்தை முன்னிட்டு, நேற்று காலை வாமனருக்கு விசேஷ திருமஞ்சனம் நடந்தது. மாலை 5:00 மணிக்கு வெண்ணைக்காப்பு அலங்காரத்தில், சுவாமிக்கு தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, சகஸ்ர தீபம், தீப பிரதிஷ்டை, விஷ்ணு சகஸ்ர நாமம் ஆகியவை நடந்தன. ஜீயர் ஸ்ரீநிவாச ராமானுஜாச்சாரிய சுவாமிகள் தலைமையில் நடந்த விழாவில், ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.