பதிவு செய்த நாள்
14
செப்
2016
12:09
திருப்பதி: தனியாரிடம் இருந்து, காளஹஸ்தி கோவில் நிலத்தை திரும்ப பெற, ஆந்திர அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆந்திராவில் உள்ள, காளஹஸ்தீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமாக, கோவில் அருகில், ஆறு ஏக்கர் நிலம் உள்ளது. அந்த நிலத்தை அளிக்குமாறும், அதில், பூந்தோட்டம் அமைத்து, கோவிலுக்கு பூக்களை அளிப்பதாகவும், சென்னையில் உள்ள ஆர்ய வைசிய தெலுங்குபேரி செட்டியார் சங்கம், கோரிக்கை விடுத்தது. இதை, கோவில் நிர்வாகம், ஆந்திர அரசிடம் தெரிவித்தது. பின், ஆந்திர அரசு, 2010 ஜூன் 23ல், சங்கத்திற்கு, நிலம் வழங்க உத்தரவிட்டது; ஆனால், அந்த சங்கம் இதுவரை, பூந்தோட்டம் அமைக்கவில்லை. இதனால், நிலத்தை திரும்ப பெறுமாறு, கோவில் நிர்வாகத்திற்கு, ஆந்திர அரசு உத்தரவிட்டு உள்ளது.