புரட்டாசி சனிக்கிழமைகளில் எல்லாரும் பெருமாளை நினைத்து விரதமிருக்கிறார்கள். இதற்கு காரணம் சனிக்கிரகத்தின் ஆதிக்கத்தில் இருந்து தங்களைக் காத்துக் கொள்ளத்தான். மகரம், கும்பம் ராசிகளுக்கு அதிபதியாகவும், லக்னங்களில் ரிஷபம், கன்னி, துலாம், கும்பத்திற்கு யோகாதிபதி ஆகவும் விளங்குகிறார். இவர்கள் தங்கள் பலன்களை அதிகரித்துக் கொள்ளவும், மற்ற ராசியினரும் லக்னத்தினரும் அவரால் ஏற்படும் கெடுபலன்களை குறைத்துக் கொள்ளவும் பெருமாள், சாஸ்தா, ஆஞ்சநேயர் ஆகியோரைச் சரணடைய வேண்டும். இந்த மூன்று தெய்வங்களில் பெருமாள், சாஸ்தாவுக்கு அன்னையாக (மோகினி) விளங்குகிறார். அத்துடன் அவர் புரட்டாசி சனியன்று திருப்பதியில் சீனிவாசனாக மானிட அவதாரம் செய்தார். இதன் காரணமாக புரட்டாசி சனி முக்கியத்துவம் பெறுகிறது. இந்த நாளில் பெருமாளை நினைத்து விரதம் இருக்கும் போது, சனியின் கெடுபலன் குறையும். அவரைச் சார்ந்த லக்னத்தினர், ராசியினருக்கு அவர்களின் செயல்பாடுகளைப் பொறுத்து பலன்கள் கூடும். இதன் காரணமாக புரட்டாசி சனியன்று பெருமாளை நினைத்து விரதமிருக்கிறார்கள்.