நபிகள் நாயகத்துக்கு அவரது பாட்டனார் அப்துல் முத்தலீப் வைத்த பெயர் முகமது. இந்த சொல்லுக்கு போற்றப்படுபவர் எனப் பொருள். இளைஞரான நபிகள் மீது மெக்கா நகர மக்கள் கொண்டிருந்த அன்பு கொஞ்ச நஞ்சமல்ல. அவரை அல்அமீன்என்றும், அஸ்ஸாதிக் என்றும் அழைத்தனர். அல்அமீன் என்றால் நம்பிக்கை மிகுந்தவர் என்றும், அஸ்ஸாதிக் என்றால் உண்மையாளர் என்றும் பொருள்.