திருமோகூர் சக்கரத்தாழ்வார் கோயில் தேரோட்டம்: மண் சாலையில் தேர் வடம் பிடிக்க சிரமம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19செப் 2016 01:09
திருமோகூர்: மதுரை அருகே திருமோகூர் சக்கரத்தாழ்வார் கோயில் தேரோடும் வீதியில் மண் சாலையால் திருவிழா காலங்களில் தேரை வடம் பிடித்து இழுப்பதில் சிரமம் ஏற்படுகிறது. திருமோகூர் சக்கரத்தாழ்வார் கோயில் பழமையும், புராதன சிறப்பும் மிக்கது. 12 ஆழ்வார்களில் சக்கரத்தாழ்வாருக்கு திருவாதவூரில் கோயில் அமைந்துள்ளது. முக்கிய விழாக்களின் போது தேரோட்டம் நடப்பது வழக்கம். அலங்கரிக்கப்பட்ட உயரமான தேர் கோயில் வெளிப்பிரகாரம், கோயில் பின்புறம் உள்ள தெப்பக்குளத்தை சுற்றி வரும். பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து தேரை நகர்த்துவர். கோயிலை வலம் வந்த பின் மீண்டும் தேர் நிலை நிறுத்தப்படும். மண் சாலையால் சிரமம்: சக்கரத்தாழ்வார் கோயிலின் பஸ் வழித்தடத்தில் மட்டும் தார் சாலை உள்ளது. ஏனைய பகுதிகளில் மண் பரப்பி சாலை அமைத்துள்ளனர். மழை காலங்களில் மண் சாலையின் மேடு, பள்ளங்களில் தேரை வடம் பிடித்து இழுத்து வரும்போது பக்தர்கள் கடும் சிரமம் அடைகின்றனர். பக்தர்கள் நலன் கருதியும், மேடு, பள்ளங்களில் தேர் ஏறி இறங்கும்போது அசம்பாவித சம்பங்கள் நடக்காமல் தடுக்கும் வண்ணம் தேரோடும் வீதிகளில் தரமான தார் சாலை அமைக்க இந்து அறநிலையத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்களிடையே கோரிக்கை வலுத்து வருகிறது.