செம்பொற்சோதிநாதர் கோவிலில் நடராஜருக்கு சிறப்பு வழிபாடு!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21செப் 2016 11:09
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி செம்பொற்சோதிநாதர் கோவிலில் நடராஜருக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. கள்ளக்குறிச்சி செம்பொற்சோதிநாதர் கோவிலில், ஆவணி சதுர்த்தசி திதியை முன்னிட்டு, சிவகாமி அம்மை சமேத நடராஜருக்கு சிறப்பு வழிபாடுகள் நடந்தது. நேற்று அதிகாலை திருவாசகம் முற்றோதல் துவங்கி, சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. தொடர்ந்து பன்னிரு திருமுறை விண்ணப்பித்து, மலர்களால் அலங்கரித்த நடராஜர், சிவகாமி அம்மை, மாணிக்கவாசகர் சுவாமிகளுக்கு பேரொளி வழிபாடு நடந்தது. சங்கு, கயிலை வாத்தியம், முழவு, கஞ்சிரா, பிரம்மதாளம் வாசித்து பூஜைகள் நடந்தது.