Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news முப்பெரும் தேவியர்! ஐப்பசி மாத விழாக்கள்! ஐப்பசி மாத விழாக்கள்!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
நவராத்திரி டிபன் தயார்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
நவராத்திரி டிபன் தயார்!

பதிவு செய்த நாள்

01 அக்
2016
04:10

நவராத்திரி கொலு பார்க்க வீட்டிற்கு வரும் விருந்தினர்களுக்கு இந்த உணவுகளை தயாரித்து அளிக்கலாமே...!

மைசூரு கடுகு சாதம்

தேவையான பொருட்கள்:

அரிசி    – 100 கிராம்
மிளகாய் வத்தல்    – 3
தேங்காய் துருவல் –2 டேபிள் ஸ்பூன்
கடலைப்பருப்பு    –1 டீஸ்பூன்
கடுகு    –அரை டீஸ்பூன்
மஞ்சள் துண்டு    –சிறிதளவு
புளி    –சிறிதளவு
நல்லெண்ணெய்    –3 டேபிள் ஸ்பூன்
பெருங்காயம்    –சிறிதளவு
கறிவேப்பிலை    –சிறிதளவு
உப்பு    –தேவையான அளவு

செய்முறை: சாதத்தை குழையாமல் பதமாக வேக வைக்கவும். தேங்காய் துருவல், மிளகாய் வத்தல், புளி, உப்பு, மஞ்சள் ஆகியவற்றை தண்ணீர் சேர்க்காமல் விழுதாக அரைக்கவும். அதனுடன் கடுகைச் சேர்த்து கரகரப்பாய் அரைத்துக் கொள்ளவும். அரைத்த விழுதையும், பச்சைக் கறிவேப்பிலையையும் சாதத்தில் இட்டு கிளறிக் கொள்ளவும். வாணலியில் சிறிது எண்ணெய் விட்டுக் காய்ந்த பின், துõள் பெருங்காயம் இட்டு பொரிந்தபின், கடலைப் பருப்பை வறுத்துக் கொள்ளவும். மீதமுள்ள எண்ணெய், பெருங்காயப் பொடி, கடலைப்பருப்பு முதலியவற்றை சாதத்தில் சேர்த்து நன்றாகக் கலந்து விட்டால் ருசிமிக்க கடுகு சாதம் ரெடி.

அவல் ஜவ்வரிசி பாயாசம்!


தேவையான பொருட்கள்:

அரிசி    –100 கிராம்
பால்    –500 மி.லி.,
ஜவ்வரிசி    –50 கிராம்
அவல்    –50 கிராம்
சர்க்கரை    –500 கிராம்
முந்திரிப்பருப்பு    –5
ஏலக்காய்    –4

செய்முறை: தண்ணீரில் ஊற வைத்த அரிசியை நிழலில் உலர்த்தவும். ஏலக்காயைப் பொடி செய்து வைக்கவும். வாணலியை சூடாக்கி உலர்ந்த அரிசியை பொன்னிறமாக வறுக்கவும். முந்திரிப் பருப்பை நெய்யில் வறுத்துக் கொள்ளவும். வறுத்த அரிசி,
ஜவ்வரிசி, அவல்,சர்க்கரை, ஏலக்காய், முந்திரி ஆகியவற்றை ஒன்றாகக் கலந்த
கலவையை மிக்சியில் அடித்து பொடி செய்து கொள்ளவும். பாலை நன்றாக கொதிக்க வைத்து கலவையைத் தேவையான அளவு சேர்த்துக் கொள்ளவும். இதனுடன்
தேங்காய்ப்பாலை விரும்பினால் சிறிதளவு சேர்த்துக் கொள்வதும் உண்டு.

பால் பணியாரம்!

தேவையான பொருட்கள்:

பச்சரிசி    –250 கிராம்
உளுந்தம்பருப்பு    –100 கிராம்
உப்பு    –சிறிதளவு
எண்ணெய்    –500 மி.லி.,
சர்க்கரை    –100 கிராம்
தேங்காய்    –1

செய்முறை: அரிசி, உளுந்தம்பருப்பை தண்ணீரில் இரண்டு மணி நேரம் ஊற  வைக்கவும். ஊறிய பின் தண்ணீர் அளவாகச் சேர்த்து இட்லி மாவு போல கெட்டியாக ஆட்டிக் கொள்ளவும். உப்பு சேர்த்து கலக்கவும். தேங்காயைத் துருவி பால் எடுத்து சர்க்கரையைக் கலக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும், மாவை  சிறு பணியார உருண்டையாக போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். பொரித்த பணியாரத்தை தேங்காய்ப்பாலில் போட்டு ஊற வைக்கவும். தேங்காய்ப்பாலுக்குப் பதிலாக பசும்பாலைக் காய்ச்சியும் பயன்படுத்தலாம்.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

மகிழ்ச்சி நிலைக்க.. செப்டம்பர் 25,2026

கணவருக்கான தேவைகளையும், வீட்டை பராமரிப்பதிலும்  அக்கறை கொண்டவர் ஆயிஷா. இவரைப் போலவே பெண்கள் இருக்க ... மேலும்
 

நலமாக வாழ... செப்டம்பர் 25,2026

* விட்டுக்கொடு. நலமாக வாழலாம். * தான் பட்ட கடனை அடைப்பதற்கு, எதுவும் விட்டு வைக்காமல் மரணிப்பது ... மேலும்
 

பாவ மன்னிப்பு செப்டம்பர் 25,2026

‘‘மக்களே! பாவ மன்னிப்பு கோருங்கள். ஏனெனில் தினமும் அவனிடம் நான் நுாறு முறை பாவ மன்னிப்பு கோருகிறேன்’ ... மேலும்
 

வேண்டாமே... செப்டம்பர் 25,2026

* நம்பிக்கை துரோகம் * பொய் பேசுதல்* வாக்கை மீறுதல்  * நேர்மை ... மேலும்
 

இரக்கம் காட்டுங்கள் செப்டம்பர் 25,2026

* பசிப்போர் மீது இரக்கம் காட்டுங்கள்.* நோயோ, துன்பமோ ஒருவன் செய்த பாவத்தால் தான் உண்டாகின்றன. * நன்மை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar