சூலுார்: சூலுார் அடுத்த காங்கயம்பாளையம் ஸ்ரீசாந்த சிவகாளியம்மன் கோவில் நவராத்திரி விழா கடந்த, 2ல் துவங்கியது. கோவில் வளாகத்தில் கொலு வைக்கப்பட்டு நவராத்திரி பூஜைகள் தினமும் நடக்கிறது. சுற்றுவட்டாரத்தில் இருந்து ஏராளமான பெண்கள், குழந்தைகள் மற்றும் பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். தளர்வறியா மனம் என்ற தலைப்பில், ஆன்மிக பேச்சாளர் சித்ரா சொற்பொழிவாற்றினார். வரும், 11ல் விஜயதசமி விழா நடக்கிறது.