Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சபரிமலையில் அவசர உதவி: நிலக்கல்லில் ... சொக்கநாதன்புத்தூர் மாரியம்மன் கோயில் தேரோட்டம் சொக்கநாதன்புத்தூர் மாரியம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பரங்குன்றம் கோயிலில் 5 கடவுள்களையும் தரிசிக்க ஏற்பாடு :உயர்நீதிமன்றத்தில் தகவல்
எழுத்தின் அளவு:
திருப்பரங்குன்றம் கோயிலில் 5 கடவுள்களையும் தரிசிக்க ஏற்பாடு :உயர்நீதிமன்றத்தில் தகவல்

பதிவு செய்த நாள்

08 அக்
2016
11:10

மதுரை, திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில், இலவசம் மற்றும் கட்டண தரிசன முறையை பயன்படுத்துவோர், முருகன் உட்பட 5 கடவுள்களை தரிசிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் தெரிவித்ததை பதிவு செய்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை, தானாக முன்வந்து விசாரணைக்கு ஏற்ற வழக்கை முடித்து வைத்தது.

விஸ்வநாதன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளைக்கு எழுதிய கடிதம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயில் குடவறை பகுதியில் முருகன், விநாயகர், துர்க்கையம்மன் சுவாமி சிலைகள் ஒரே வரிசையில் அமைந்துள்ளன. குடவறையின் இடது, வலது புற பகுதியில் சிவன், திருமால் சுவாமி சிலைகள் உள்ளன. இலவச தரிசனத்தில் செல்வோர் முருகன், விநாயகர், துர்க்கையம்மனை தரிசிக்க முடியும். சிவன், திருமாலை பார்க்க, தரிசிக்க முடியாது. சிறப்பு தரிசன கட்டணத்தில் செல்வோர் முருகன் உட்பட 5 கடவுள்களை வழிபடலாம். இலவச தரிசன முறையை பயன்படுத்தும் ஏழை பக்தர்களுக்கு பாகுபாடு காட்டப்படுகிறது.

சிறப்பு தரிசன கட்டணம் வசூலிப்பதை தடுக்க வேண்டும்.அனைத்து பக்தர்களும் இடையூறின்றி வழிபாடு நடத்த நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டிருந்தார். இதனடிப்படையில் தானாக முன்வந்து வழக்காக விசாரணைக்கு ஏற்ற நீதிபதிகள், அனைவரும் தரிசிக்கும் வகையில் வழித்தடம் ஏற்படுத்த மதுரை கலெக்டர் கோயிலை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும், என்றனர். நீதிபதிகள் எஸ்.நாகமுத்து, எம்.வி.முரளிதரன் கொண்ட அமர்வு நேற்று விசாரித்தது. கலெக்டர் வீரராகவ ராவ், இலவசம் மற்றும் கட்டண தரிசன முறையை பயன்படுத்துவோர் கம்பத்தடி மண்டபத்தில் ஒன்று சேர்ந்து, கர்ப்பகிரகம் செல்லும் வழியில் 5 கடவுள்களையும் தரிசிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நடைமுறை இன்று (நேற்று) முதல் அமல் படுத்தப்பட்டுள்ளது, என அறிக்கை தாக்கல் செய்தார். இதை பதிவு செய்த நீதிபதிகள், இதில் மேலும் எவ்வித உத்தரவும் பிறப்பிக்க தேவையில்லை, எனக்கூறி வழக்கை முடித்து வைத்து கலெக்டர், கோயில் செயல் அலுவலரை பாராட்டுகிறோம் என்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வேடசந்தூர்; வேடசந்தூர் தேவிநாயக்கன்பட்டியில் ஒவ்வொரு ஆண்டும், தைப்பூசத்தை முன்னிட்டு ஊர் மக்கள் ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயில் நிர்வாகத்தில் செயல்படும் பெரியநாயகி அம்மன் கோயிலில் தைப்பூச விழா நாளான ... மேலும்
 
temple news
அன்னூர்; குமரன் குன்று கல்யாண சுப்பிரமணியசாமி கோவில் தைப்பூச தேரோட்டத்தில் பல ஆயிரம் பக்தர்கள் ... மேலும்
 
temple news
காரைக்குடி; குன்றக்குடி சண்முகநாத பெருமான் கோயிலில் தைப்பூச திருவிழாவையொட்டி நேற்று ஏராளமான ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான திருநெல்வேலி நெல்லையப்பர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar