சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் அருகே, மழை வேண்டி மக்கள் நூதன வழிபாட்டில் ஈடுபட்டனர். சத்தியமங்கலம் அருகேயுள்ளது கொண்டப்பநாயக்கன்பாளையம் கிராமம். இங்கு நடப்பாண்டில் போதிய மழை பெய்யவில்லை. இதனால் மழை பெய்ய வேண்டி, கிராம மக்கள் நேற்று நூதன வழிபாட்டில் ஈடுபட்டனர். வீடு, வீடாக சென்று மடி ஏந்தி பழைய சாதத்தை சேர்த்தனர். அதை ஊரில் உள்ள அம்மன் கோவிலில் வைத்து, சாணத்தில் உருவாக்கிய பிள்ளையாரை வைத்து, வழிபாடு செய்தனர். பின்னர் சேகரித்த பழைய சாதத்தை, அனைவருக்கும் பரிமாறினர். இவ்வாறு செய்தால் மழை பெய்யும் என்றும், அவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.