நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் அண்ணா நகர் முத்துமாரியம்மன் கோவிலில் நவராத்திரியை முன்னிட்டு பக்தர்கள் தீச்சட்டி ஏந்தி ஊர்வலம் சென்றனர். நெல்லிக்குப்பம், அண்ணா நகர் முத்துமாரியம்மன் கோவிலில் நவராத்திரியை முன்னிட்டு தினமும் சிறப்பு அபிஷேகமும் தீபாராதனையும் நடக்கிறது. அம்மன் வெவ்வேறு அலங்காரங்களில் அருள்பாலித்து வருகிறார். நேற்று முன்தினம் காராமணிக்குப்பத்தில் இருந்து ஆண்களும், பெண்களும் தீச்சட்டி ஏந்தியும், முளைப்பாரி சுமந்தும், முதுகில் அலகு குத்தி வேனை இழுத்தும், பறவை காவடியிலும் ஊர்வலமாக வந்தனர். அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.