Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கன்னி: (உத்திரம் 2,3,4, அஸ்தம், சித்திரை 1,2) ... விருச்சிகம்: (விசாகம் 4, அனுஷம், கேட்டை) வீட்டில் சுபநிகழ்ச்சி விருச்சிகம்: (விசாகம் 4, அனுஷம், ...
முதல் பக்கம் » சித்திரை ராசி பலன் ((14.4.2026 முதல் 14.5.2026 வரை)
துலாம்: (சித்திரை 3,4, சுவாதி, விசாகம் 1,2,3) குழந்தை பாக்கியம்
எழுத்தின் அளவு:
துலாம்: (சித்திரை 3,4, சுவாதி, விசாகம் 1,2,3) குழந்தை பாக்கியம்

பதிவு செய்த நாள்

12 அக்
2016
09:10

ஒழுக்கத்தை மதித்து நடக்கும் துலாம் ராசி அன்பர்களே!

ராகு, சுக்கிரன் ஆகியோர் நற்பலனை வாரி வழங்குவர். செவ். அக்.25 வரை நன்மை தருவார். இதனால் பக்தி உயர்வு மேம்படும். பொருளாதார வளம் உயரும். நவ.3க்கு பிறகு சமூக மதிப்பு சுமாராக இருக்கும். வீண் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. உங்கள் பொறுப்புகளை நம்பிக்கையானவர்களிடம் மட்டும் ஒப்படைப்பது நல்லது. குடும்பத்தில் உள்ள மூத்தவர்களின் ஆலோசனையை பின்பற்றவும். குடும்பத்தில் பொன், பொருள் சேரும். பிள்ளைகளின் வளர்ச்சி கண்டு பெருமிதம் கொள்வீர்கள். அக்.18க்கு பிறகு அக்கம் பக்கத்தினருடன் கருத்து வேறுபாடு உருவாகலாம். நவ.8க்கு பிறகு குடும்பத்தில் நிம்மதி நிலவும். பிரிந்த தம்பதியர் ஒன்று சேருவர். புதுமணத் தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். கணவன்-, மனைவி இடையே அன்பும் இணக்கமும் உண்டாகும். பெண்களால் அக்.30,31ல் உதவி கிடைக்க வாய்ப்புண்டு. விருந்து, விழா என சென்று வருவீர்கள். அக்.25,26ல் உறவினர் வருகையால் நன்மை கிடைக்கும். ஆனால் நவ. 6,7,8ல் உறவினர் வகையில் கருத்துவேறுபாடு உருவாகலாம். அதிக நெருக்கம் வேண்டாம். நவ. 4,5ல் புத்தாடை, அணிகலன்கள் வாங்கி மகிழ்வீர்கள்.அலைச்சலால் உடல் சோர்வுக்கு ஆளாவீர்கள். அக்.25க்கு பிறகு உடல் நலக்குறைவு உண்டாகலாம். பயணத்தின் போது சற்று கவனம் தேவை.

தொழில், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் சிறப்பான வளர்ச்சி பெறும். பங்கு வர்த்தகத்திலும் நல்ல ஆதாயம் கிடைக்கும். வியாபாரிகளுக்கு அரசின் சலுகை கிடைக்கும். அக்.27,28,29, நவ.1,2,3ல் சந்திரனால் சிறுசிறு தடைகள் ஏற்படலாம். நவ.11,12ல் எதிர்பாராத வருமானம் கிடைக்கும். தொழில் ரீதியான வெளியூர் பயணம் செல்ல நேரிடும். தொழிலாளர்களின் ஒத்துழைப்பு சீராக இருக்கும்.

பணியாளர்கள் சீரான வளர்ச்சி காண்பர். வங்கியில் எதிர்பார்த்த கடனுதவி எளிதில் கிடைக்கும். போலீஸ் மற்றும் ராணுவத்தில் பணிபுரிபவர்கள் சிறப்பான முன்னேற்றம் காணலாம். அவர்கள் தங்கள் கோரிக்கைகளை அக்.25 தேதிக்குள் கேட்டு பெற்று கொள்ளவும். நவ.3க்கு பிறகு வேலையில் பொறுமையும் நிதானமும் தேவைப்படும். அக்.23,24 சிறப்பான நாட்களாக அமையும். சுக்கிரனால் நவ. 8க்கு பிறகு பதவி உயர்வு கிடைக்கும்.

கலைஞர்கள் சிறப்பான நிலையில் இருப்பர். புதிய ஒப்பந்தம் கிடைக்கப் பெற்று வருமானம் காண்பர். சக கலைஞர்களின் மத்தியில் மதிப்பு உயரும். அரசிடம் இருந்து விருது, பாராட்டு போன்றவை கிடைக்கும்.

அரசியல்வாதிகள் தலைமையின் இணக்கத்திற்கு உரியவராகத் திகழ்வர். சிலருக்கு புதிய பதவி கிடைக்க யோகமுண்டாகும். அரசியல்வாதிகள் சீரான வளர்ச்சி காண்பர். அக்.25க்கு பிறகு விடாமுயற்சி தேவைப்படும். நவ.9,10ல் மனக்குழப்பம் ஏற்படலாம்.

மாணவர்கள் புதன் சாதகமற்ற இடத்தில் இருப்பதால் விழிப்புடன் படிக்கவும். பெற்றோர், ஆசிரியர்களின் வழிகாட்டுதலை ஏற்று நடப்பது நல்லது.

விவசாயிகளுக்கு உழைப்புக்கு தகுந்த வருமானம் கிடைக்கும். நெல், கரும்பு, எள், கிழங்கு வகைகளில் நல்ல மகசூல் கிடைக்கப் பெறுவர். புதிய சொத்து வாங்க நினைப்பவர்கள் அக்.25க்குள் பயன்படுத்திக் கொள்ளவும். வழக்கு, விவகாரங்கள் சாதகமாக அமைய வாய்ப்புண்டு. கால்நடை வளர்ப்பிலும் ஆதாயம் அதிகரிக்கும்.

பெண்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும். மாதத் தொடக்கத்தில் குடும்பத்தோடு புனித தலங்களுக்கு சென்று வருவீர்கள். அக்.17,18, நவ.13,14ல் பிறந்த வீட்டில் இருந்து உதவி கிடைக்கும். விருந்து, விழா என சென்று வருவீர்கள். சுய தொழில் செய்து வரும் பெண்களுக்கு வங்கி கடன் எளிதாக கிடைக்கும். பெண் பணியாளர்கள் சிறப்பான பலனை பெறுவர். நிர்வாகத்தின் ஆதரவுடன் சலுகை கிடைக்கப் பெறுவர்.

நல்ல நாள்: உங்கள் ராசிக்கு அக். 17,18,23,24,25,26,30,31 நவ. 4,5, 11,12,13,14. ஆகியவை நல்ல நாட்களாகும். இந்த நாட்களில் சுபநிகழ்ச்சிகளுக்குரிய ஏற்பாடு துவங்குதல், பயணம் செய்தல் ஆகியவற்றைச் செய்யலாம்.

கவன நாள்: ஒரு ராசிக்கு எட்டாமிடத்தில் சந்திரன் சஞ்சரிக்கும் காலம் தான் சந்திராஷ்டமம். அந்த வகையில் உங்கள் ராசிக்கு 8ம் இடமான ரிஷப ராசியில் சந்திரன் அக். 19,20, நவ.15 ல் இருப்பார். இந்த காலத்தில் வீண் விவாதங்களைத் தவிர்த்து இறைவழிபாட்டில் கவனம் செலுத்தவும். பண விஷயத்தில் விழிப்புடன் இருப்பது அவசியம்.

அதிர்ஷ்ட எண்: 6,8 நிறம்: வெள்ளை, நீலம்

பரிகாரம்: கேதுவுக்கு அர்ச்சனை செய்யுங்கள். ராகு காலத்தில் துர்க்கை வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். வியாழக்கிழமை தட்சிணாமூர்த்தியை வணங்குவது நன்மை தரும். புதன் கிழமை குல தெய்வத்தை வழிபட்டு பசுவுக்கு தழை போடுங்கள். தினமும் காலையில் சூரிய வழிபாடு நடத்துங்கள்.

 
மேலும் சித்திரை ராசி பலன் ((14.4.2026 முதல் 14.5.2026 வரை) »
temple news
மேஷம்அசுவினிநேர்மையாக வாழ்ந்துவரும் உங்களுக்கு, பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் மோட்சக்காரகன் கேது, பூர்வ ... மேலும்
 
temple news
ரிஷபம்கார்த்திகை 2, 3, 4 ம் பாதம்எடுத்த வேலைகளை முடிப்பதில் உறுதியாக இருக்கும் உங்களுக்கு, பிறக்கும் ... மேலும்
 
temple news
மிதுனம்மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்திட்டமிட்டு செயல்படுவதில் வல்லவரான உங்களுக்கு, பிறக்கும் சித்திரை ... மேலும்
 
temple news
கடகம்புனர்பூசம் 4 ம் பாதம்எதிலும் தெளிவாக செயல்படக்கூடிய உங்களுக்கு, பிறக்கும் சித்திரை மாதம் யோகமான ... மேலும்
 
temple news
சிம்மம்மகம்விடாமுயற்சி செய்பவரான உங்களுக்கு, பிறக்கும் சித்திரை மாதம் வெற்றி தரும் மாதமாக இருக்கும். ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar