பகீரதன் என்னும் அரசன், ஆகாயத்திலிருந்து மிகவும் முயற்சி செய்து, கங்கையை இந்த பூமிக்கு கொண்டுவந்தான். (அதனால் தான் நாம் கஷ்டப்பட்டு செய்யும் முயற்சியை, பகீரத பிரயத்தனம் என்கிறோம்). அந்த பிரவாஹத்தை சற்று தாங்கி பிடித்து பின் பூமியில் ஓட விடவேண்டும் என்று பிரம்மா கூறுகிறார். காரணம் என்ன வென்றால் அது அப்படியே பூமியில் விழுந்தால், அந்த வேகத்தை பூமியால் தாங்கமுடியாது என்பதால், சிவன் தனது ஜடையில் கங்கையை தாங்கி முடிந்தார். பின்னர் அந்த நதி சம வேகத்தில் ஓடியது. பகீரதனால், பூமிக்கு கொண்டுவரப்பட்ட தால், கங்கைக்கு பாகீரதி, பகீரதி என்ற பெயர்களும் உண்டு.