புரட்டாசி கடைசி சனி: கோயில்களில் குவிந்த பக்தர்கள்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15அக் 2016 10:10
மதுரை: பொதுவாக திருமாலை சனிக்கிழமையில் வழிபடுவது மிகவும் சிறப்பென்கின்றனர் பெரியோர்கள். அதுவும் புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாளை வழிபட்டால் எல்லாவிதமான கஷ்டங்களும் நீங்கி வளமான வாழ்வு கிட்டும் என்பது இந்து மதத்தின் மரபு வழி நம்பிக்கை. புரட்டாசி மாத கடைசி சனிகிழமை முன்னிட்டு அனைத்து கோயில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். கோவை பாப்பநாயக்கன்பாளையம் ஸ்ரீ ஸ்ரீநிவாஸப் பெருமாள் கோயிலில் புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையை யொட்டி சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீநிவாஸப் பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.