சேங்கல் மலை பெருமாள் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15அக் 2016 10:10
கரூர்: கரூர் அருகே, வரதராஜ பெருமாள் கோவிலில், திருக்கல்யாண உற்சவம் நேற்று நடந்தது. கரூர் மாவட்டம் மண்மங்கலம் சேங்கல் மலையில், வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இதில், நேற்று காலை, 7:00 மணிக்கு உற்சவர் திருமஞ்சன நிகழ்ச்சியுடன் விழா துவங்கியது. பின், 10:00 மணிக்கு தேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாளுக்கு திருக்கல்யாணம் நடந்தது. தொடர்ந்து நடந்த மஹா தீபராதனைக்கு பின், நூற்றுக்கணக்கான பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.