சீதை கேட்ட மானைத் தேடி ராமர் சென்றார். அவரை நீண்ட நேரமாக காணாததால், லட்சுமணர் ராமனைத் தேடிப் புறப்பட்டார். அதற்கு முன் தன் அம்பினால் தரையில் ஒரு வட்டமிட்டு அதை தாண்டக் கூடாது என சீதையை எச்சரித்துச் சென்றதாகச் சொல்வர். இதற்கு ‘லட்சுமணர் ரேகை’ என்று பெயர். ஆனால் இந்த செய்தி வால்மீகி ராமாயணத்திலோ அல்லது கம்பராமாயணத்திலோ இடம்பெறவில்லை. செவிவழி கதையாக மக்கள் மத்தியில் இது கூறப்படுகிறது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ராவணன், துறவி வேடமணிந்து சீதையிடம் பிச்சை கேட்டான். அவள் கோட்டைத் தாண்டி ஆபத்தில் சிக்கினாள். இலங்கைக்கு கடத்தப்பட்டாள். மூலநுõலில் இல்லாவிட்டாலும் கூட, பெண்கள் தங்களின் வரம்பு அறிந்து விழிப்புடன் செயல்பட வேண்டும் என்பதை உணர்த்தும் விதத்தில், இந்த சம்பவம் ராமாயணத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.