சிவனுக்கு ‘ஸ்மசானவாஸீ’ (சுடுகாட்டில் வசிப்பவர்) என்று பெயருண்டு. மனிதப் பிறவிக்காக உடலைத் தந்தவர் அவர். அந்த உடலைத் தாங்கும் உயிர்கள், உலகில் வாழும் காலத்தில் நிறைய பாவம் செய்கிறார்கள். இறந்த பிறகு உயிர் மட்டும் மேலே செல்லும். உடல் சாம்பலாகி விடும். கருணாமூர்த்தியான சிவன், அந்த உடல்களின் பாவங்களைப் போக்கும் விதத்தில் சுடுகாட்டிற்கே வந்து சாம்பலைப் பூசிக் கொள்கிறார். அதாவது உயிரானது அறிவுப்பூர்வமாக செய்த பாவங்களுக்கு மறுபிறவி என்னும் பரிகாரம் உண்டு. உடல் ரீதியாக செய்த பாவங்களை உலகிலிருந்து அகற்ற, புண்ணியமே வடிவான சிவன் தாமே பூசி அருள்கிறார்.