பதிவு செய்த நாள்
01
நவ
2016
12:11
ராஜராஜேஸ்வரி நகர்; ராஜராஜேஸ்வரி நகர் சிருங்ககிரி சண்முகர் கோவிலில் மகா கந்த சஷ்டி உற்சவம் நேற்று துவங்கியது.காலையில் கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி, மாலையில் அங்குரார்ப்பணம், ரக் ஷா பந்தனா, யாக கால பூஜை; இன்று முதல், 4ம் தேதி வரை தினமும் காலையில் மண்டபார்ச்சனை, கலச ஆராதனை, வேதபாராயணம், ஹோமம், கலச அபிஷேகம், மகா மங்களார்த்தி, பிரசாத வினியோகம்; மாலையில் சத்ருசம்ஹா, த்ரிஷதி அர்ச்சனை, உற்சவ மூர்த்தி ரத உற்சவம், ஹோமம், மகா மங்களார்த்தி நடக்கிறது.வரும், 5ம் தேதி காலையில் மண்டபார்ச்சனை, கலச ஆராதனை, வேதபாராயணம், ஹோமம், கலச அபிஷேகம், மகா மங்களார்த்தி, பிரசாத விநியோகம், மாலையில் சூரசம்காரம்; வரும், 6ம் தேதி காலையில் பிராயனசித்தாபிஷேகம், மகா மங்களார்த்தி, பிரசாத வினியோகம், மாலையில் திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.விழா நாட்களில் இன்று மாலை ஹரிபிரசாத் குழுவினரின் சாக்சபோன் இசை, 2ம் தேதி மாலை நிஹரிகா பட்டின் பக்தி பாடல், 3ம் தேதி சஞ்சனா, ஸ்ருதி சுனில் பரதநாட்டியம், 4ம் தேதி ரூபாஸ்ரீ, கேசவின் பரதநாட்டியம் நடக்கிறது. பக்தர்கள் கலந்து கொள்ளுமாறு, கோவில் தலைவர் டாக்டர் அருணாச்சலம் கேட்டுக் கொண்டுள்ளார்.