பதிவு செய்த நாள்
03
நவ
2016
11:11
பழநி: பழநி சண்முக நதியில் முதலைகள் நடமாட்டம் உள்ளதால், பக்தர்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பழநி மலைக்கோவில் ஞான தண்டாயுதபாணி சுவாமிைய தரிசனம் ெசய்ய வரும் பக்தர்கள் சண்முக நதியில் நீராடிவிட்டு காவடி, அலகுகுத்தி மலைக்கோவிலுக்கு ெசல்கின்றனர். இந்நிைலயில் ெபரியாவுைடயார் கோவில் அருகே, சண்முக நதி ஆற்றங்கைரயில் நேற்று காைல, 10:30 மணிக்கு, முதலை ஒன்று படுத்திருந்தைத பார்த்த பக்தர்கள் அதிகாரிகளிடம் ெதரிவித்தனர். இதையடுத்து, ெபரியாவுைடயார் கோவில் அருகே ஆற்றங்கைரயில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டது. தீயணைப்பு துறையினர் முதலையை பிடிக்கச் ெசன்ற போது, கைரயில் இருந்த முதலை, ஆற்றுக்குள் ெசன்று மூழ்கி விட்டது. ஆற்றில் தண்ணீர் நிைறய இருப்பதால் முதலையை பிடிக்க இயலாது என, வனத்துைறயினர் கூறி விட்டனர்.
பக்தர்கள் குளிக்க தடை:சண்முக நதி ஆற்றில் முதலை நட மாட்டம் உள்ளதால், யாரும் குளிக்க வேண்டாம் என, கோவில் நிர்வாகம் சார்பில் எச்சரிக்ைக அறிவிப்பு பலகை ைவக்கப்பட்டது.