பதிவு செய்த நாள்
09
நவ
2016
05:11
இறைவனுக்கு சூடாக நிவேதனம் செய்வது என்பது இரண்டு வகை உண்டு. ஆவி உனக்கு அமுது எனக்கு என்று கூட தமிழில் சொல்வார்கள். அதாவது, வாசனை. அந்த வாசனையை பகவானுக்குக் கொண்டு சென்று, நைவேத்தியம் செய்வார்கள். ஆனால், பக்தி உள்ளவர்கள் அவ்வாறு கொதிக்கக் கொதிக்கக் கொண்டு போய் நைவேத்தியம் செய்ய மாட்டார்கள். அது மட்டுமல்ல, குழம்பு, கூட்டு, கறி, மோர், ஊறுகாய், நெய், ஜலம் உள்பட வைத்து நிவேதனம் செய்வார்கள். வட இந்தியாவில் போய் பார்த்தால் தெரியும், அவர்கள் இவை எல்லாவற்றையும் நிவேதனம் செய்வதை. இரண்டாவது, நாம் என்ன சாப்பிட வேண்டும் என்று நினைக்கிறோமோ, அது எல்லாமே பகவானுக்கு சமர்ப்பணம் பண்ணப்பட்டதாக இருக்க வேண்டும். ஒரு காலத்தில் நம் கோயில்களில் எல்லாமே அப்படித்தான் இருந்தது. நித்தியமும் புது பானை, புது ஊறுகாய், புது சமையல் என எல்லாமே இருந்தது. நாளடைவில், சாதம் மட்டும்தான் புதுசு என்பதால் மற்றவைகளை நிவேதனம் செய்யாமல் இருக்கும் பழக்கம் வந்ததோ என்னவோ! கொதிக்கக் கொதிக்க ஆவி பறக்க நிவேதனம் பண்ணுவது என்பது பிதுர்களுக்கு மட்டும்தான். உஷ்ண பாகாகி பிதர: என்று சொல்வது, சிராத்தத்தின் போது பிதுர்களுக்கு மட்டும்தான்!