ஆறாம் விரல், ஐந்தாம் பெண் இவை அதிர்ஷ்டம் என்பது சரியா?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09நவ 2016 05:11
ஆறாம் விரல், ஐந்தாம் பெண் என்பதெல்லாம், பொதுவாக இழிவாகப் பேசப்படக்கூடாது என்பதற்காக, முன்னோர்களால் ஏற்படுத்தப்பட்ட ஒரு அமைப்பு. நம் சரீரத்தில் உள்ள ஊனத்தின் வெளிப்பாடுதான் அது என்பதால், அதனை அதிர்ஷ்டம் என்று சொல்ல இயலாது. அதுபோல் ஒரு காலத்தில் ஐந்தாவது பெண்ணைப் பெற்றால் அரசனும் ஆண்டியாகி விடுவான் என்று சொல்வார்கள். அப்படிச் சொல்லக்கூடாது என்பதற்காக, இவைகளெல்லாம் ஓர் அதிர்ஷ்டம் என்று கொண்டாடி, அவர்களை உற்ஸாகப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட வழிமுறை என்று சொல்லலாம்.